Wednesday 28 March 2018

தாது மணல் கண்டுபிடிப்பு


தாது மணல் ,ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாறைகள் வெயிலில் காய்ந்தும், மழையால் நனைந்தும் வருவதால், வெப்பத்தால் விரிவதும், குளிரில் சுருங்கிச் சிதைவதும் தொடர்ந்து நிகழ்கின்றது. இச்சிதைவில் பல்வேறு கனிமங்கள் உதிர்கின்றன.
உதிர்ந்த இக்கனிமங்கள் மழை பெய்யும்போது, அடித்துச் செல்லப்பட்டு ஓடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. அங்கு ஆற்றோரங்களில் தாதுமணலில் ஒரு பகுதி வண்டல்போல் படிகின்றன.எஞ்சியுள்ள தாதுக்கள் ஆற்று நீரால் அடித்து வரப்பட்டு, கடலில் வந்து சேர்வதால் கடற்கரையை ஒட்டி ஏராளமான கனிமங்கள் பல கன அடியளவு படிகின்றது.கடலைத் தொடர்ந்து போய் வந்து மோதுவதால் கடலின் ஓரம் படிந்துள்ள கனிமங்கள் (இலுமனைட், ரூட்டைல்) கடற்கரையோரம் ஏராளமாய்ப் படிகின்றன. இது ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து  நிகழ்வதால் கடற்கரை கனிமவளம் நிறைந்துக் காணப்படுகின்றது.தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் அரிய வகை தாது மணல் இருப்பதாக 1905ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின் 1910ம் ஆண்டு தாது மணல் பிரித்தெடுக்கும் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. தாது மணலில் கார்னெட், இல்மினைட், ரூடைல், ஜிர்கான், மேனோசைட், தோரியம் உள்ளிட்ட கனிமங்கள் இயற்கையாகவே கலந்திருக்கின்றன. தாது மணல் பிரித்து எடுக்கும் ஆலை  பின்னர் 1970ல் முழுமையாக அணுசக்தி துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. 

No comments:

Post a Comment