Friday 6 April 2018

தாது மணல் என்பது என்ன?




தாதுமணல் வெறும் மணல் அல்ல! தாதுமணல், இயற்கையாகவே கதிரியக்கத்தன்மைகொண்ட இல்மனைட், கார்னெட், ரூடைல், சிலிகான், மோனோசைட் போன்ற விலைமதிக்க முடியாத தாது உப்புகள் நிறைந்த கனிமப்புதையல் ஆகும். அணுசக்திக்குத் தேவையான இயற்கை கதிர் இயக்கத் தனிமங்கள் அடங்கிய இத்தகைய  தாது மணல் உலகத்தில் இந்தியாவில், அதுவும் தமிழகக் கடற்கரைப் பகுதியில்தான் அதிகம் கிடைக்கிறது.தமிழக கடற்கரை தாதுமணல்-லில் கார்னெட், இலுமினேட், ரூட்டைல், ஜிர்கான், சிலிமினேட், லீஸோகென்ஸ், மோனோசைட் போன்ற தாதுக்கள் உள்ளன. தூத்துக்குடி கடற்கரையோர மணலில் கிடைக்கும் மோனோசைட் தாது அணு ஆராய்ச்சிக்கும், விண்வெளி  ஆராய்ச்சிக்கும் மிகவும் முக்கியமான தாதுப்பொருளாகும்.சராசரியாக 2 முதல் 5 சதவீதம் வரை மோனோசைட் கடற்கரை மணலில் உள்ளது. இந்த தாதுமணல்-லில் கிடைக்கும் தாதுப்பொருளில் உள்ள தோரியம் மற்றும் யுரேனியம் பிரித்தெடுக்கப்படும்போது கிடைக்கும் மோனோசைட்டுக்கு தனி மதிப்பு கிடைக்கிறது.