Showing posts with label #types-of-sand-mining. Show all posts
Showing posts with label #types-of-sand-mining. Show all posts

Friday 6 April 2018

தாது மணல் என்பது என்ன?




தாதுமணல் வெறும் மணல் அல்ல! தாதுமணல், இயற்கையாகவே கதிரியக்கத்தன்மைகொண்ட இல்மனைட், கார்னெட், ரூடைல், சிலிகான், மோனோசைட் போன்ற விலைமதிக்க முடியாத தாது உப்புகள் நிறைந்த கனிமப்புதையல் ஆகும். அணுசக்திக்குத் தேவையான இயற்கை கதிர் இயக்கத் தனிமங்கள் அடங்கிய இத்தகைய  தாது மணல் உலகத்தில் இந்தியாவில், அதுவும் தமிழகக் கடற்கரைப் பகுதியில்தான் அதிகம் கிடைக்கிறது.தமிழக கடற்கரை தாதுமணல்-லில் கார்னெட், இலுமினேட், ரூட்டைல், ஜிர்கான், சிலிமினேட், லீஸோகென்ஸ், மோனோசைட் போன்ற தாதுக்கள் உள்ளன. தூத்துக்குடி கடற்கரையோர மணலில் கிடைக்கும் மோனோசைட் தாது அணு ஆராய்ச்சிக்கும், விண்வெளி  ஆராய்ச்சிக்கும் மிகவும் முக்கியமான தாதுப்பொருளாகும்.சராசரியாக 2 முதல் 5 சதவீதம் வரை மோனோசைட் கடற்கரை மணலில் உள்ளது. இந்த தாதுமணல்-லில் கிடைக்கும் தாதுப்பொருளில் உள்ள தோரியம் மற்றும் யுரேனியம் பிரித்தெடுக்கப்படும்போது கிடைக்கும் மோனோசைட்டுக்கு தனி மதிப்பு கிடைக்கிறது. 






Friday 30 March 2018

தாதுமணல்-மோனோசைட்



தமிழக கடற்கரை தாதுமணல்-லில் கார்னெட், இலுமினேட், ரூட்டைல், ஜிர்கான், சிலிமினேட், லீஸோகென்ஸ், மோனோசைட் போன்ற தாதுக்கள் உள்ளன. 

மோனோசைட் என்றால் என்ன?

செம்மண் நிறத்தில் பாஸ்பேட் கலந்த அரிய வகை தாதுமணல் தாது மோனோசைட். இதில் மோனோசைட், சிஇ, மோனோசைட், எல்.ஏ, மோனோசைட், என்.டி, மோனோசைட் , எஸ்.எம் ஆகிய பிரிவுகள் உள்ளன. தோரியத்துக்கான முக்கிய மூலக்கூறாக மோனோசைட் விளங்குகிறது.  இந்தியா, மடகாஸ்கர், தென்னாப்ரிக்காவில் மோனோசைட் கிடைக்கிறது. தோரியத்தை பகுப்பதன் மூலம் ராடான் , 220 என்ற கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தியாகிறது. அணுமின் நிலையங்களில் தோரிய பயன்பாடு மிகவும் அதிகம்.

மோனோசைட் தோரியம் அணுக்களை பிளக்க பயன்படுத்தப்படுகிறது. இது மோனோசைட்டை பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி பிரிக்கப்படுகிறது. இந்த தோரியம் கலந்த மோனோசைட் தாதுமணல் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி கடலோர மாவட்ட தாதுமணல்-லில் அதிகம் கலந்துள்ளது. இப்பகுதியில் தாதுமணல்-லை அள்ள அணுசக்தி கழக ஒப்பதல் பெற வேண்டும். ஆனால் கார்னெட், இலுமினேட், ரூட்டைல் போன்ற தாதுக்கள் கலந்த மணல(தாதுமணல்).

Wednesday 28 March 2018

தாது மணலின் வகைகள்


தாது மணல்-லின் வகைகள்:
கார்னெட்(தாது மணல்): மாசற்ற தூய தாது இது.
இதன் பயன்: உப்புக் காற்றால் சேதமான கப்பல், கட்டடங்கள், சிலைகளைத் தூய்மை செய்யவும், கண்ணாடி, செயற்கைக் கரிகள், அலுமினியம், டைட்டானியம் போன்றவற்றைத் துண்டிக்கவும், நீரைச் சுத்தப்படுத்தவும், கணினித்திரை, வால்வுகள், மூக்குக் கண்ணாடி போன்றவற்றை மெருகேற்றவும் இது(தாது மணல்) பயன்படுகிறது.
இலுமனைட்(தாது மணல்): வர்ணங்கள், பிளாஸ்டிக், வெல்டிங்ராடு, டைட்டானியம், விளையாட்டுப் பொருட்கள், மருந்து, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றைச் செய்யப் பயன்படுகிறது. இது(தாது மணல்) ரஷ்யாவில் இல்மன் மலை மற்றும் ஏரிப் பகுதியில் முதன்முதலில் எடுத்து ஆய்வு செய்து கண்டறியப்பட்டதால் இலுமனைட் என்று பெயர் பெற்றது.
சிர்கான்(தாது மணல்) : இது(தாது மணல்) 18,000 சென்டிகிரேடு வெப்பத்தில் மட்டுமே உருகும் தன்மை கொண்டது.
உருக்கு, வார்ப்பு தொழிற்சாலைகளிலும், செராமிக் டைல்ஸ், இரும்பு, உருக்கு ஆலைக் கற்றைகள் தயார் செய்யவும் பயன்படுகிறது. மேலும், மருந்து, சமையல் பாத்திரங்கள், குளியலறை, கழிவறைப் பொருட்கள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.
ரூடைல்(தாது மணல்): இது(தாது மணல்) டைட்டானியத்தின் மூலப் பொருள், வர்ணங்கள், பிளாஸ்டிக், வெல்டிங் ராடு, நகை, விண்வெளிக் கருவிகள், ஜவுளிப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.
மோனசைட்(தாது மணல்): தோரியத்தை உள்ளடக்கிய தாதுப் பொருள் இது. அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது. தோரியத்தைப் பகுத்து கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தாது மணல்-லின் மதிப்பு: உலகச் சந்தையில் தாதுக்களின் தேவையும் அதிகம். 
கார்னெட்(தாது மணல்),  ரூஸ்டைல்(தாது மணல்),  சிர்கான்(தாது மணல்), மோனோசைட்(தாது மணல்).
உலகத் தாதுமணல் இருப்பில் பாதியளவு இந்தியாவில் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவும் கிடைக்கின்றன.

மகாராட்டிரா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து குறைவான அளவும் தாது மணல் கிடைக்கின்றன.