தாதுமணல் வெறும் மணல் அல்ல! தாதுமணல், இயற்கையாகவே கதிரியக்கத்தன்மைகொண்ட இல்மனைட், கார்னெட், ரூடைல், சிலிகான், மோனோசைட் போன்ற விலைமதிக்க முடியாத தாது உப்புகள் நிறைந்த கனிமப்புதையல் ஆகும். அணுசக்திக்குத் தேவையான இயற்கை கதிர் இயக்கத் தனிமங்கள் அடங்கிய இத்தகைய தாது மணல் உலகத்தில் இந்தியாவில், அதுவும் தமிழகக் கடற்கரைப் பகுதியில்தான் அதிகம் கிடைக்கிறது.தமிழக கடற்கரை தாதுமணல்-லில் கார்னெட், இலுமினேட், ரூட்டைல், ஜிர்கான், சிலிமினேட், லீஸோகென்ஸ், மோனோசைட் போன்ற தாதுக்கள் உள்ளன. தூத்துக்குடி கடற்கரையோர மணலில் கிடைக்கும் மோனோசைட் தாது அணு ஆராய்ச்சிக்கும், விண்வெளி ஆராய்ச்சிக்கும் மிகவும் முக்கியமான தாதுப்பொருளாகும்.சராசரியாக 2 முதல் 5 சதவீதம் வரை மோனோசைட் கடற்கரை மணலில் உள்ளது. இந்த தாதுமணல்-லில் கிடைக்கும் தாதுப்பொருளில் உள்ள தோரியம் மற்றும் யுரேனியம் பிரித்தெடுக்கப்படும்போது கிடைக்கும் மோனோசைட்டுக்கு தனி மதிப்பு கிடைக்கிறது.
Showing posts with label #what-Monazite. Show all posts
Showing posts with label #what-Monazite. Show all posts
Friday 6 April 2018
Friday 30 March 2018
தாதுமணல்-மோனோசைட்
தமிழக கடற்கரை தாதுமணல்-லில் கார்னெட், இலுமினேட், ரூட்டைல், ஜிர்கான், சிலிமினேட், லீஸோகென்ஸ், மோனோசைட் போன்ற தாதுக்கள் உள்ளன.
மோனோசைட் என்றால் என்ன?
செம்மண் நிறத்தில் பாஸ்பேட் கலந்த அரிய வகை தாதுமணல் தாது மோனோசைட். இதில் மோனோசைட், சிஇ, மோனோசைட், எல்.ஏ, மோனோசைட், என்.டி, மோனோசைட் , எஸ்.எம் ஆகிய பிரிவுகள் உள்ளன. தோரியத்துக்கான முக்கிய மூலக்கூறாக மோனோசைட் விளங்குகிறது. இந்தியா, மடகாஸ்கர், தென்னாப்ரிக்காவில் மோனோசைட் கிடைக்கிறது. தோரியத்தை பகுப்பதன் மூலம் ராடான் , 220 என்ற கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தியாகிறது. அணுமின் நிலையங்களில் தோரிய பயன்பாடு மிகவும் அதிகம்.
மோனோசைட் தோரியம் அணுக்களை பிளக்க பயன்படுத்தப்படுகிறது. இது மோனோசைட்டை பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி பிரிக்கப்படுகிறது. இந்த தோரியம் கலந்த மோனோசைட் தாதுமணல் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி கடலோர மாவட்ட தாதுமணல்-லில் அதிகம் கலந்துள்ளது. இப்பகுதியில் தாதுமணல்-லை அள்ள அணுசக்தி கழக ஒப்பதல் பெற வேண்டும். ஆனால் கார்னெட், இலுமினேட், ரூட்டைல் போன்ற தாதுக்கள் கலந்த மணல(தாதுமணல்).
Subscribe to:
Posts (Atom)