Wednesday 28 March 2018

தாது மணலின் வகைகள்


தாது மணல்-லின் வகைகள்:
கார்னெட்(தாது மணல்): மாசற்ற தூய தாது இது.
இதன் பயன்: உப்புக் காற்றால் சேதமான கப்பல், கட்டடங்கள், சிலைகளைத் தூய்மை செய்யவும், கண்ணாடி, செயற்கைக் கரிகள், அலுமினியம், டைட்டானியம் போன்றவற்றைத் துண்டிக்கவும், நீரைச் சுத்தப்படுத்தவும், கணினித்திரை, வால்வுகள், மூக்குக் கண்ணாடி போன்றவற்றை மெருகேற்றவும் இது(தாது மணல்) பயன்படுகிறது.
இலுமனைட்(தாது மணல்): வர்ணங்கள், பிளாஸ்டிக், வெல்டிங்ராடு, டைட்டானியம், விளையாட்டுப் பொருட்கள், மருந்து, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றைச் செய்யப் பயன்படுகிறது. இது(தாது மணல்) ரஷ்யாவில் இல்மன் மலை மற்றும் ஏரிப் பகுதியில் முதன்முதலில் எடுத்து ஆய்வு செய்து கண்டறியப்பட்டதால் இலுமனைட் என்று பெயர் பெற்றது.
சிர்கான்(தாது மணல்) : இது(தாது மணல்) 18,000 சென்டிகிரேடு வெப்பத்தில் மட்டுமே உருகும் தன்மை கொண்டது.
உருக்கு, வார்ப்பு தொழிற்சாலைகளிலும், செராமிக் டைல்ஸ், இரும்பு, உருக்கு ஆலைக் கற்றைகள் தயார் செய்யவும் பயன்படுகிறது. மேலும், மருந்து, சமையல் பாத்திரங்கள், குளியலறை, கழிவறைப் பொருட்கள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.
ரூடைல்(தாது மணல்): இது(தாது மணல்) டைட்டானியத்தின் மூலப் பொருள், வர்ணங்கள், பிளாஸ்டிக், வெல்டிங் ராடு, நகை, விண்வெளிக் கருவிகள், ஜவுளிப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.
மோனசைட்(தாது மணல்): தோரியத்தை உள்ளடக்கிய தாதுப் பொருள் இது. அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது. தோரியத்தைப் பகுத்து கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தாது மணல்-லின் மதிப்பு: உலகச் சந்தையில் தாதுக்களின் தேவையும் அதிகம். 
கார்னெட்(தாது மணல்),  ரூஸ்டைல்(தாது மணல்),  சிர்கான்(தாது மணல்), மோனோசைட்(தாது மணல்).
உலகத் தாதுமணல் இருப்பில் பாதியளவு இந்தியாவில் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவும் கிடைக்கின்றன.

மகாராட்டிரா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து குறைவான அளவும் தாது மணல் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment